மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு 16 இல் நேர்முக தேர்வு

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி கல்வித் தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ், ஆங்கிலம்,

News image
Updated On :10 ஜூலை 2014, 10:57 am

முத்துகுமார்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக இப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி.தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி கல்வித் தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ், ஆங்கிலம், சமூகவியல், தொடர்பியல், வணிகவியல், மேலாண்மையியல், கல்வியியல், உடற்கல்வியியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், செயல்முறை மின்னணுவியல் (முதுநிலை பொறியியலில் மின்னியல் மற்றும் தொடர்பியல் அல்லது அதற்கு சமமான பிரிவு) புள்ளியியல், உயிரி தொழில்நுட்பவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் அறிவியல், விலங்கு அறிவியல், தாவர அறிவியல், உளவியல், குற்றவியல் மற்றும் குற்றநீதியியல், புவிதொழில்நுட்பவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான நேர்முகத்தேர்வு இம் மாதம் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தாற்காலிக விரிவுரையாளராகத் தேர்ச்சி பெறுகிறவர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தேசிய, மாநில அளவில் தகுதிகாண் தேர்வு (நெட், ஸ்லெட்) பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும், முதுநிலை, இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், முதுநிலை பொறியாளர், முதுநிலை தொழில்நுட்பவியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும் மாத தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.