நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

செயலர் ஜே.முரளி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இரா.சரவணன் வரவேற்றார்.மாநாட்டில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க

News image
Updated On :14 ஜூலை 2014, 10:05 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் நரிக்குறவர்ளை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுவை நரிக்குறவர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

அச்சங்கத்தின் முதல் கோரிக்கை மாநாடு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் ஜே.சாரங்கபாணி தலைமை தாங்கினார்.

செயலர் ஜே.முரளி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் இரா.சரவணன் வரவேற்றார்.மாநாட்டில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ள நரிக்குறவர்களை பல்வேறு போராட்டங்களுக்கு பின் மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் இணைத்துள்ளது. புதுவை அரசும் தாமதம் செய்யாமல் உடனே இணைக்ககேவண்டும்.

வேட்டையாடுவதை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த நரிக்குறவர்கள் புதிய சட்டங்களுக்கு பின் குலத்தொழிலை இழந்து விட்டனர். நியாயமான வழியில் பிழைப்பதற்காக கடற்கரை பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வருகிறோம்.சில நேரங்களில் காவல்துறையால் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே கடற்கரைச் சாலையில் புதிதாக அமைத்துள்ள அங்காடியில் பாசிமணி, ஊசிமணி விற்க இடம் ஒதுக்க வேண்டும்,நரிக்குறவர் பேட்டையில் சுகாதாரமான குடிநீர், தெருவிளக்கு வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானக்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்கத்தின் பெயர்ப்பலகையை சிஐடியு நிர்வாகி வே.கு.நிலவழகன் திறந்து வைத்தார். சிபிஎம் மாநில செயலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றி கொடியேற்றினார்.துணைத் தலைவர் பி.இளங்கோ நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.