நகர்மன்ற திமுக உறுப்பினர் கொலை: அதிமுக உறுப்பினர் தற்கொலை
பெரம்பலூர் அருகே, அதிமுக நகர்மன்ற உறுப்பினரின் வீட்டில், திமுக உறுப்பினரை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெட்டி கொலை செய்தனர். அதே வீட்டில், அதிமுக உறுப்பினர் தூக்கிட்டு


பெரம்பலூர் அருகே, அதிமுக நகர்மன்ற உறுப்பினரின் வீட்டில், திமுக உறுப்பினரை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெட்டி கொலை செய்தனர். அதே வீட்டில், அதிமுக உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வந்தார். பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அன்புமுத்து (37). திமுகவை சேர்ந்த இவர், நகராட்சியின் 11-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
தீபாவுக்கும், அன்புமுத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த மயில்சாமி தீபாவை கண்டித்துள்ளார். இருப்பினும் தீபா, அன்புமுத்துவுடனான கள்ளக்காதலை விட மறுத்ததாக தெரிகிறது. இதனால் தீபாவுக்கும், மயில்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தீபா வீட்டில், தலை மற்றும் உடல் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் அன்புமுத்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீஸார் வீட்டின் மற்றொரு அறையை திறக்க முயற்சித்தபோது, அந்த அறை உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையை உடைத்து பார்த்தபோது, தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, தீபா மற்றும் அன்புமுத்துவின் உடல்களை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, துணை கண்காணிப்பாளர் சுருளியாண்டி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...