அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே லாரி மோதி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவரும் பைக்கில் சென்றவரும் பலி

விருதுநகர் அருகே பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர் மற்றும்  இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை காலை 2 பேர் உயிரிழந்தனர்.

Updated On :16 ஜூலை 2014, 12:03 pm

விருதுநகர் அருகே பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர் மற்றும்  இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை காலை 2 பேர் உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு ஓசூருக்கு லாரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கன்னியாகுமரி அருகே வளியவிளையைச் சேர்ந்த ஞானபிரகாஷத்தின் மகன் வில்பிரட்ஜான்(49) என்பவர் ஓட்டினாராம். அப்போது, விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் 4 வழிச்சாலையில் மேற்கு பக்க சர்வீஸ் சாலை முக்கு ரோடு வழியாக வரும் போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே இருந்தவர்கள் மீது மோதியது.

இதில், மதுரைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கோட்டூர் சின்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி மும்மூர்த்தி ஆகியோர் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீஸார் சடலங்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் வில்பிரட்ஜான் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.