சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு செல்வம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்க்ஷாப் திடீரென தீப்பிடித்தது. தீ மேலும் பரவி அருகாமையில் இருந்த ரத்தினசாமி என்பவரது வீடும் எரிந்து சேதமுற்றது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரத்தினசாமி என்பவரது வீட்டில் 2 பவுன் நகைகள், மேலும் அவரது மகள்கள் ரஞ்சிதம், ரோஜா ஆகியோரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற சான்றிதழ்களும் எரிந்து சேதமுற்றன. தீ விபத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.