தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோவிலூர் அருகே சாலை மறியல்: தேமுதிகவினர் 300 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :21 ஜூலை 2014, 8:54 am

ச.​ கார்த்​தி​கே​யன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் திருவண்ணாமலை-தியாகதுருகம் இடையே தஞ்சாவூரான் சாலையை இணைக்கும் வகையில் தென்பெண்ணையாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கவும், மணலூர்பேட்டையில் இருந்து ஜம்பை, காங்கியனூர், மேலந்தல் வழியாக மூங்கில்துறைப்பட்டு செல்லும் பிரதான சாலையை செப்பனிட வேண்டியும் சாலை மறியல் நடைபெற்றது.

தேமுதிக மாவட்டச் செயலரும், திருக்கோவிலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எல்.வெங்கடேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் உள்பட சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் போலீஸாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.