சேலத்தில் நாளை பொருள்காட்சி தொடக்கம்

சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருள்காட்சி சனிக்கிழமை (ஜூலை 26)  தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ்நாடு செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Updated on
1 min read

சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருள்காட்சி சனிக்கிழமை (ஜூலை 26)  தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ்நாடு செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் பொருள்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை பொருள்காட்சி தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு நேரு கலையரங்கில் இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது.

 அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகிக்கும் இந்த விழாவில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பொருள்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அரசுச் செயலர் மூ.ராசாராம், செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 விழாவில், புதுவாழ்வுத் திட்டம், கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

 பொருள்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள், தனியார் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 பொழுதுபோக்கு அம்சங்களான ஜெயின்ட் வீல், பீ.ஜி.என். ரைடு, மெரிக்கோ ரவுண்டு, பிஃஷ் ரைடு, ஸ்விங் போட், மேரிகப், கொலம்பஸ், பிரேக் டேன்ஸ், டோரா டோரா, ரேஞ்சர், பிரீஸ் வீல், கிராஸ் வீல், சிறுவர்கள் ரைடு உள்ளிட்ட குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

 இந்த பொருள்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com