விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 50 சதவீதம் மானியத்தில் மானியக் கடன் பெற மலைவாழ் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: தாட்கோ மூலம் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு வகையான கடன்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மலைப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினருக்கு அத்தியவாசிய பொருள்களை இடையூறு இல்லாமல் விநியோகம் செய்யும் வகையிலும், நகரும் நியாய விலைக்கடைகளுக்கு பொருள்கள் எடுத்து செல்லவும், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சுயவேலைப்பு அளிக்கும் வகையில் ரூ.11 லட்சம் வரையில் வாகனக் கடன் 50 சதவீதம் மானியத்தில் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவாரகவும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
அதை பூர்த்தி செய்து உடன் குடும்ப அட்டை நகல், வட்டாட்சியர் கையொப்பம் இட்ட இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இரண்டு புகைப்படம், ஓட்டுநர் உரிமம், வாகன விலைப்புள்ளி விவரம் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவைகளை இணைத்து மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் நேரில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தகுதியான பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

