சீர்காழி அருகே பேருந்து-கார் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி
சென்னை நங்கநல்ல்லூரைச் சேர்ந்த அபர்ணா (30) என்பவர், கணவர், குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்குச் சென்று வழிபாடு முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார்,


சீர்காழி அருகே அரசுப் பேருந்துடன் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் பலியாயினர்.
சென்னை நங்கநல்ல்லூரைச் சேர்ந்த அபர்ணா (30) என்பவர், கணவர், குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்குச் சென்று வழிபாடு முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார், சீர்காழி அருகே புத்தூர் பாலிடெக்னிக் என்ற பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் வந்தபோது, சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்குச் சென்ற அரசுப் பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், தேனியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேந்திரன், அபர்ணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அபர்ணாவின் கணவர், குழந்தைகள் காயம் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...