கரூர் பயணிகள் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து கரூரில் இருந்து ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
திருச்சியில் இருந்து கரூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலைத்தான் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்டுதல் போன்ற தொழிóல்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் இரவு நேரத்தில் கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அதிகாலை 6.50 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயிலை 6.50 மணிக்கு ஊழியர்கள் இயக்க முயன்ற போது, ரயில் இன்ஜினில் உள்ள வால்வு பழுதடைந்து பிரேக்கும் பழுதானது தெரிய வந்தது.
பழுதை நீக்க நேரமானதால், பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று இன்ஜின் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே இன்ஜினில் பழுது நீக்கப்பட்டதால் காலை 8.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

