மீத்தேன் திட்டத்தை எதிர்த்து சிதம்பரத்தில் பிரசார இயக்கம்!
சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, அக்னிச் சிறகுகள் எழுச்சி இயக்கம் ஆகியவை அங்கம் வகிக்கும் கடலூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் மீத்தேன் எடுப்புத்


சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, அக்னிச் சிறகுகள் எழுச்சி இயக்கம் ஆகியவை அங்கம் வகிக்கும் கடலூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தைக் கண்டித்து கீழமூங்கிலடி-மேலமூங்கிலடி கிராமம் வரை பரப்புரை பயணம் நடைபெற்றது.
சிதம்பரம் வட்டம் கீழமூங்கிலடியிலிருந்து தொடங்கிய இப்பரப்புரைப் பயணத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். மாணவர் முன்னணி நிர்வாகிகள் செ.ரோகேஷ், ஐ.தன்ராஜ், ஆ.யவனராணி, தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் இரா.எல்லாளன், சு.சுகன்ராஜ், செ.சத்யா, அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு செயலாளர் வே.சுப்பிரமணியசிவா, செயற்குழு உறுப்பினர்கள் செ.மணிமாறன், த.ஜான்பாண்டியன் உள்ளிட்ட 20 பேர் பரப்புரை இயக்கத்தில் பங்கேற்றனர்.
ஜூலை 26-ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கீழமூங்கிலடியிலிருந்து புறப்பட்டு அம்பலத்தாடிக் குப்பம், தையாக்குப்பம் வழியாக சென்று மேலமூங்கிலடி கிராமம் வரை சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டு, அக்கிராமங்களில் வீடு வீடாக சென்று மீத்தேன் திட்ட ஆபத்துகள் குறித்த காட்சிப் படங்களை காண்பித்து விளக்கிப் பேசியும் துண்டறிக்கைகள் வழங்கியும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இரவு 7.30 மணி அளவில் மீத்தேன் திட்ட ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வரும் மேலமூங்கிலடிப் பகுதியில் “பாலைவனமாகும் காவிரி டெல்டா : மீத்தேன்“ எனும் விழிப்புணர்வு ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக அப்பகுதிக்கு வந்தடைந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க பரப்புரை குழுவினருக்கு, தமிழக உழவர் முன்னணி மேலமூங்கிலடி கிளை தலைவர் இராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...