மேட்டூர் அணையின் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரை முடிந்த அளவு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை விரைவாக நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உழவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாருக்கு அனுப்பிய மனு விவரம்:
காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தற்போது உள்ள சூழ்நிலையில் சாகுபடிக்கு பயன்படுத்தப்படாமல் வீணாகும் வாய்ப்பே உள்ளது. எனவே, மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மத்தியில் உரிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தண்ணீரை முடிந்த அளவுக்கு பயன்படுத்தி உழவு மற்றும் நடவு பணிகளை உடனடியாக தொடங்குமாறு வேளாண் அலுவலர்கள் வழிகாட்ட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.