47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மீனவர்கள் 50 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

நாகையிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் 50 பேர் திங்கள்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :29 ஜூலை 2014, 4:49 am

சங்கர்

நாகையிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் 50 பேர் திங்கள்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 5 படகுகளும் நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இருப்பினும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது காலை 10 மணி வரை உறுதியாகவில்லை.

இது தொடர்பாக நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும், மீன்வளத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.