ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாகன தணிக்கையின்போது தலைமைக் காவலரை தாக்கிய இளைஞர் கைது

வாகன தணிக்கையின்போது தலைமைக்காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :29 ஜூலை 2014, 6:06 pm

வாகன தணிக்கையின்போது தலைமைக்காவலரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக்காவலர் சிவக்கொழுந்து ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை முத்தையா நகர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை தலைமைக்காவலர் சிவக்கொழுந்து கேட்டுள்ளார். அப்போது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, அந்த இளைஞர் திடீரென  தாக்கியுள்ளார்.

 இதில் படுகாயமடைந்த தலைமைக்காவலர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தலைமைக்காவலர் சிவக்கொழுந்தை தாக்கியதாக உசுப்பூரை சேர்ந்த குமார் மகன் கௌதம்(23) என்பவரை, அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.