மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில், காந்திமதி அம்மன் சன்னிதியில் ஆடிப்பூர திருநாள் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு

News image
Updated On :30 ஜூலை 2014, 3:14 pm

முத்துகுமார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி முளைக்கட்டுத் திருநாள் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில், காந்திமதி அம்மன் சன்னிதியில் ஆடிப்பூர திருநாள் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.கடந்த 24 ஆம் தேதி நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களை படைத்து வழிபட்டனர். அன்று மாலையில் அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருவிழாவின் 10 ஆம் நாளான புதன்கிழமை இரவு காந்திமதியம்மன் சன்னிதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள் நடைபெற்றது. இதையொட்டி காந்திமதி அம்பாள் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு முளைக்கட்டு நிகழ்வுக்குப் பின்பு மகாதீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெண்கள் ஒரு வாரம் விரதமிருந்து நவதானியங்களை முளைப்பாரியாக எடுத்து வந்ததோடு, அம்மனுக்கு பட்சணங்களையும் படைத்து வழிபட்டனர். இதுதவிர வளைகாப்பு நிகழ்வுக்கு வர முடியாத பக்தர்கள் பலரும், இந்த நாளில் வளையல் மற்றும் மலர்மாலையை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.