தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி்க்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டதை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நகர திமுக சார்பில் உதவிஆட்சியர்

News image
Updated On :30 ஜூலை 2014, 9:08 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி்க்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டதை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நகர திமுக சார்பில் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முதியோர், விதவை, உடல் ஊனமுற்றோம், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை சுமார் 2 ஆயிரம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், நகர காவல் நிலையம் பின்புறம் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும், காப்பீடு திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்த அனைவருக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சாக்கரடை நீர் கலபத்தை தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீர் இருவேளையும் வழங்கிட வேண்டும், நகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ள ஆணையாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி ஜி.சுகுமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு, நகர அவைத் தலைவர் தென்னவன் எஸ்.கே.ஆறுமுகம், மாவட்ட கலை, இலக்கிய அணி அமைப்பாளர் த.ஜேம்ஸ்விஜயராகழன், மாவட்ட பிரதிநிதிகள் டி.ராஜேந்திரன், த.செல்வம், நகர துணைச் செயலாளர் சி.பன்னீர்செல்வம், பா.பாலசுப்பிரமணியன், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், ப.அப்புசந்திரசேகரன், ஏஆர்சி.மணி, கோ.நடராஜன், கே.வெங்கடேசன், ஆர்.விஜயா, இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், நகர பொருளாளர் ஜெ.அறிவழகன், வட்டச் செயலாளர்கள் முகமது இஸ்மாயில், ஏ.ஜாபர்அலி, பா.ராஜேந்திரஷ் மக்கள் க.உத்திராபதி, அசோக் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.