தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் வழங்க அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் புகைபோக்கி உயர் கோபுரத்திலிலிருந்து கீழே விழுந்து இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு

News image
Updated On :30 ஜூலை 2014, 11:54 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தில் புகைபோக்கி உயர் கோபுரத்திலிலிருந்து கீழே விழுந்து இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்குவது என உதவிஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் ஐஎல்எஃப்எஸ் எனும் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் கட்டுமானப்பணியில் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், மேற்க்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 26-ம் தேதி சனிக்கிழமை இந்நிறுவனத்தின் 900 அடி உயரமுள்ள புகைபோக்கி உயர் கோபுரத்தில் 320 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கி பணியாற்றிக் கொண்டிருந்த பீகாரை சேர்ந்த சோனுராஜ்செளத்ரி(26), முகீத்கான்(31) உள்ளிட்ட இரு தொழிலாளர்கள் கயிறு அறுபட்டதால் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். வினோத்குமார் (21) என்ற வாலிபர் கால்துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். இச்சம்பவத்தை அடுத்த நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே,பாலகிருஷ்ணன் அந்நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு தொழலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவின் பேரில் சிதம்பரம் உதவி ஆட்சியர் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதனை அடுத்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், தனியார் மின் உற்பத்தி நிறுவன மேலாளர் வரதராஜன், எல் அன்ட் டி (L &T) நிறுவன மேலாளர்கள் தானப்பபிள்ளை, சுரேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரமேஷ்பாபு, கரிக்குப்பம் பகுதி செயலாளர் பரமானந்தம், விவசாய சங்க ஒன்றிய அமைப்பாளர் கருணைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 8 லட்சம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு முதல் தவணையாக ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்வது, அடிப்படைவசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வது, சட்டரீதியான அடிப்படை சம்பளம் வழங்குவது, சம்பளம் குறித்து சம்பளபில் வழங்குவது, மேற்கண்ட முடிவுகளை அமலாக்கம் செய்யப்பட்டது குறித்து செப்டம்பர் முதல் வாரத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.