நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவன் மீது போலீஸார் தாக்குதல்: மனித உரிமைக்குழு விசாரணை

கல்லூரி மாணவரை போலீஸார் தாக்கியதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுச்செயலர் சுகுமாறன் மனித உரிமைக்குழுவுக்கு புகார் அனுப்பியிருந்தார். அதன்பேரில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, மனித

News image
Updated On :31 ஜூலை 2014, 10:40 am

சுஜித்குமார்

கிருமாம்பாக்கத்தில் கல்லூரி மாணவரை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக மனித உரிமைக்குழு வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

கல்லூரி மாணவரை போலீஸார் தாக்கியதாக மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுச்செயலர் சுகுமாறன் மனித உரிமைக்குழுவுக்கு புகார் அனுப்பியிருந்தார். அதன்பேரில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, மனித உரிமைக்குழு விசாரணை புதுவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழுத்தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் விசாரணையை நடத்தினார். உறுப்பினர் சேவியர் மேரி உடனிருந்தார்.புகார் அளித்த சுகுமாறன், பாதிக்கப்பட்ட மணப்பட்டு கார்த்திபனை (19) விசாரணைக்கு அழைத்து வந்தார்.

அவரிடம் குழுத்தலைவர் சம்பத்குமார் விசாரணை நடத்தினார். குழுவிடம் அளித்த மனுவில் மாணவன் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாவது: நான் பிசிஎம் 3ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூன் 23ம் தேதி செல்போன், பணம் பறித்த வழக்கில் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நான் உட்பட 3 பேர் சரணடைந்தோம்.போலீஸார் என்னை கடுமையாக தாக்கினர். உடல் நிலை முழுவதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தாக்கியது தொடர்பாக போலீஸார் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி தாக்கினர். சிறையிலும் என் மீது தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பாக போலீஸார், சிறைகாவலர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் போலீஸ் எஸ்.ஐ லெனின் பாரதியும் ஆஜராகி விளக்கம் தந்தார். பாதிக்கப்பட்ட கார்த்திபன் அளித்த மனுவின் நகல் எஸ்ஐயிடம் தரப்பட்டது. அதற்கு பதில் தர கூறினார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.