புதுவையில் 3 பஞ்சாலைகளை மூட அரசு முயற்சி: ஏஐடியுசி குற்றச்சாட்டு
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. பின்னர் தமிழ்நாடு செயலாளர் மூ ர்த்தி நிருபர்களிடம்


புதுச்சேரியில் உள்ள சுதேசி, பாரதி, ஏஎப்ஃடி பஞ்சாலைகளை மூட மாநில அரசு முயற்சித்து வருகிறது என பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தமிழ்நாடு மாநிலச் செயலர் ஏ.மூர்த்தி கூறியுள்ளார்.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. பின்னர் தமிழ்நாடு செயலாளர் மூ ர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
பஞ்சாலை தொழில் நாடு முழுவதும் தற்போது எழுச்சி பெற்று வருகிறது. பஞ்சாலைகள் 27 சதவீத அந்நிய செலவாணியை ஈட்டித்தந்துள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 14 சதவீதத்தை பஞ்சாலைகள் பிடித்துள்ளன. 3.50 கோடி பேர் நேரடியாக பஞ்சாலைகளில் பணிபுரிந்து வரு கின்றனர். தன்னிறைவு பெற்ற தொழிலாளாக ஜவுளி தொழில் மாறி வருகிறது. ஆனால் தொழிலாளர்களின் நிலை முன்னேறாமல் உள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பஞ்சாலைகளில் நியமிக்கப் படுகின்றனர்.
தமிழகத்தில் 1.50 லட்சம் பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆலைகளில் அடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தவில்லை. மூடப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ரூ.பல கோடியில் திட்டம் கொண்டுவந்தும் அந்த நிதி பயனாளிகளை சென்றடையவில்லை.இவையனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் சீர்செய்ய வேண்டும். புதுச்சேரியில் சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை மூடும் நடவடிக்கையில்தான் அரசு இற ங்கியுள்ளது. அதை நவீனப்படுத்தி இயக்க வேண்டும். ஆலைகளுக்கு தேவையான பொரு ட்களை வாங்குவதற்கு குழு அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் சாய பட்டறைகள் மூடப் பட்டதால் வேறு மாநிலங்களில் சென்று சாயமிடப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள ஆலைகளில் டை அவுஸ் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூல்களுக்கு சாயமேற்றினால் அதிக வ ருவாய் ஈட்ட முடியும். தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தை முழுமையாக செய ல்படுத்தினால் புதுச்சேரி வளம் பெறும். இந்தியாவில் சிமெண்ட், சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளக்குழு உள்ளது. அதேல பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் சம்பளக்குழு அமைக்க வேண்டும்.
பயிற்சி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.15 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் பி ரச்சார இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் மூர்த்தி.
பேட்டியின்போது புதுச்சேரி மாநில ஏஐடியூசி பொதுச்செயலாளர் அபிஷேகம் உட்பட பல மாநில செயலாளர்கள் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...