சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் நகர அதிமுக துணைச் செயலாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

சிதம்பரம் நகர அதிமுக துணைச் செயலாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.80 லட்சம் திருடுபோனது.

News image
Updated On :6 ஜூன் 2014, 8:56 am

சிதம்பரம் நகர அதிமுக துணைச் செயலாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.80 லட்சம் திருடுபோனது.

சிதம்பரம் காரிய பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் டேங்க் ஆர்.சண்முகம். நகர அதிமுக துணைச் செயலாளராக உள்ள இவர் வீட்டை பூட்டிக்கு கொண்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு குற்றாலத்திற்கு சென்றார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சண்முகத்தின் தாயார் அம்புஜம் வீட்டை திறக்கச் சென்ற போது உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்து, தனது மகன் சண்முகத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் சண்முகம் வீட்டிற்கு சென்று  முன்புறக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.80 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.