இவரது வீட்டின் கார் டிரைவர் காளீஸ்வரன்(28). வெள்ளக்கோயிலை சேர்ந்த இவர் பாலசமுத்திரத்திலேயே வீடு பிடித்து தங்கியுள்ளார். தனுஸ்வரியின் உறவினர் வீரமணி மகன் செந்தில்குமார்(40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன்னரே மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியே பைனான்ஸ் செய்து வருகிறார். கடந்த மார்ச்.22 ல் பள்ளியின் கட்டிட செலவுக்காக தனுஸ்வரியும், செல்வக்குமாரும் ரூ.23 இலட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த நிலையில் இருவரும் மார்ச்.23ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த பணம் ரூ.23 இலட்சம், கார் மற்றும் கார் டிரைவர் காளீஸ்வரன், சிறுமி துளசி சியாமளா ஆகியோர் காணாமல் போயிருந்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்திரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.