ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே மின்கம்பி உரசி தீ விபத்தில் கொய்யா கன்றுகள் நாசம்

பழநி அருகே ஆயக்குடியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின.

News image
Updated On :9 ஜூன் 2014, 1:14 pm

என்.​ அங்​கு​பாபு

பழநி அருகே ஆயக்குடியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின.

பழநி பகுதியில் உள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. பழநி அருகே ஆயக்குடி கறிக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் கம்பத்துராஜா (30). இவருக்கு பொன்னிமலை கரடு பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கரில் தென்னை மற்றும் கொய்யா கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில் பருவமழை பொய்த்ததால் தோட்டத்தில் செடிகளின் இலைகள் காய்ந்து ஏராளமான சருகுகள் இருந்துள்ளன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தின் வழியாக தாழ்வாக சென்ற மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசி உள்ளன. இதில் ஏற்பட்ட தீப்பொறி, சருகுகளில் விழுந்துள்ளது.தீ மளமளவென பரவியதில் சுமார் 3 ஏக்கரில் இருந்த 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின. காய்ப்பு நிலையில் இருந்த கொய்யா கன்றுகள் கருகியதால் சுமார் 1.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கம்பத்துராஜா மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இவரது புகாரின் பேரில்  ஆயக்குடி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.