வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் மீது வழக்கு
பழனியில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கில் சப்இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பழனியில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கில் சப்இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கண்ணன்(வயது30). இவர் வழக்கறிஞராக உள்ளார். கடந்த மே மாதம் 7ந்தேதி ஒரு வழக்கு தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பொருட்டு அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கணேசன், வேலுச்சாமி மற்றும் சப்இன்ஸ்பெக்டர் வினோதா ஆகியோர் கார்த்திக் கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் பழனி சார்பு நீதிமன்றத்தில் 4 பேர் மீதும் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி பழனி அடிவாரம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...