திருக்கோவிலூர் அருகே காரில் சென்றவரிடம் போலீஸ் போல் நடித்து ரூ.10 லட்சம் கொள்ளை
திருகோவிலூரில் போலீஸ் போல் நடித்து காரை வழிமறித்து மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்


திருகோவிலூரில் போலீஸ் போல் நடித்து காரை வழிமறித்து மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்மணி 30 இவர் அதே பகுதியில் கடலூர் செல்லும் சாலையில் வட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று வியாழன் மாலை திருவண்ணாமலை சென்று தனது மாமியார் வீட்டில் தங்கினார்.
தொழில் செய்யவதற்காக மாமியார் வீட்டில் இருந்து 10 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு தனக்கு சொதமான காரில் புறப்பட்டார். காரை அவரது டிரைவர் மோகன் ஓட்டி வந்தார். மனம்பூண்டி 4 முனை சந்திப்பில் இருந்து விழுப்புரம் சாலையைப் பிடிக்க மறந்து திருகோவிலூர் - கீழையூர் வழியாக தென்பன்னை ஆற்று தரைப்பாலத்தின் வழியாக இவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிரே காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாங்கள் போலீஸ் என கூறி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அறகண்ட நல்லூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...