ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை வீடு புகுந்து பீரோவில் இருந்த நாலரை பவுன் தங்க பொருட்களை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் வை.பால்கண்ணன் (40). இவர் டீக்கடை வைத்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை கடைக்கு பால் வாங்குவதற்காக வீட்டிலிருந்து பால்வண்ணன் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று படுத்து தூங்கியுள்ளனர். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு பால்வண்ணன் வந்தபோது வீடு திறந்து கிடந்துள்ளது. வீட்டினுள் இருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த நாலரை பவுன் எடையுள்ள நகைகளையும் வெளியே இருந்த செல்போனையும் மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பால்வண்ணன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

