/

காரைக்குடி சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

காரைக்குடி காவல் சரகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.56 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகப் போலீஸில்

Updated On :16 ஜூன் 2014, 3:29 pm

காரைக்குடி காவல் சரகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.56 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் காந்திபிச்சை (50). இவர் குற்றப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் 10ஆம் தேதி தொண்டி அருகே உள்ள தனது சொந்த ஊரில் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டிச் சென்றிருந்தார்.திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பிய போது வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் லாக்கரை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.56 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்களை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இது குறித்து குற்றப்பிவு போலீஸில் இவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.