பாபநாசம், சேர்வலாறு அணைகளில் மிதமான மழை
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. மழை நீடிக்காததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்காததால் கார் பருவ


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. மழை நீடிக்காததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்காததால் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கார் பருவம் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி பணிகளை ஆரம்பிக்க ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாமல் சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
நிகழ் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. கடந்த 2013 ஆம் ஜூன் மாதம் 20 ஆம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிகழ் பருவத்தில் அணைகளில் இருந்து இன்னமும் தண்ணீர் திறக்காத காரணத்தால் சாகுபடி பணிகளை தொடங்கி முடியாத நிலையில் பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.மே மாதம் முதல் வாரத்தில் பெய்த கோடை மழையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஒரு சில மானாவாரிக் குளங்களுக்கு நீர்வரத்து கிடைத்ததால் தற்போது வெள்ளங்குளி உள்ளிட்ட சில இடங்களில் குளத்தில் உள்ள நீரை கொண்டு விவசாயிகள் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.48 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.96 அடியும் உள்ளது. ஆகவே கார் சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாபநாசம் அணையில் புதன்கிழமை நிலவரப்படி 12 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 310.19 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 204.75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியி்ல் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை.
மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 61.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.08 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 35.75 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...