சொத்துக்காக மகனை கொலை செய்த தாய், மனைவி உள்பட 4 பேர் கைது
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் உள்ள துரைசாமி கிணற்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மருவத்தூர் போலீஸôருக்கு கடந்த 11ம்


பெரம்பலூர் அருகே சொத்துக்காக மகனை அடித்து கொலை செய்த தாய், மனைவி உள்பட 4 பேரை மருவத்தூர் போலீஸôர் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் உள்ள துரைசாமி கிணற்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மருவத்தூர் போலீஸாருக்கு கடந்த 11ம் தேதி இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்பாடி (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரவிசக்கரவர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அய்யலூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுப்ரமணியன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சுப்ரமணியனின் அப்பாவுக்கு 2 தாரம் என்பதும், சொத்துக்காக அவரது தாய் சின்னம்மாள் (55), மனைவி வள்ளியம்மை (32), சுப்ரமணியனின் தம்பி கதிரேசன் (38), அண்ணன் பழனிசாமி (57) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுப்ரமணியனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சின்னம்மாள், கதிரேசன், வள்ளியம்மை, பழனிசாமி ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்.வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேற்கண்ட 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...