வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாபநாசம், ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1249 கனஅடி

News image
Updated On :22 ஜூன் 2014, 11:28 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1249 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 56 அடியாக இருந்தது.

நிகழ் கார் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை காலமாகும். ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. பருவ மழை நீடிக்காததால் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை.இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் 17 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 2 மி.மீ மழையும் பெய்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்வரத்து 1249 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 51.66 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 12 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 14 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 56.00 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71.19 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 65.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் 46.50 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 54.50 அடியாகவும் இருந்தது.போராட்டம் நடத்த முடிவு: பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் 50 அடிக்கு அதிகமாக இருப்பதால் தாமதமின்றி கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைகளில் தண்ணீர் திறக்க தாமதம் ஏற்படுவதால் கார் சாகுபடியும் தாமதம் ஆகிறது. இதனால் கார் பருவ அறுவடை செய்ய அக்டோபர் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என கன்னடியன் கால்வாய் விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.