நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து 9 மாதம் ஆகியும் அரசு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. உயர்ந்து வரும் விலைவாசி, தொழிலாளர்களின் நியாயத்தை கருத்தில்


ஊதிய ஒப்பந்தம் முடிந்து 9 மாதமாகியும் பேச்சுவார்த்தை தொடங்காததை கண்டித்து அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து 9 மாதம் ஆகியும் அரசு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. உயர்ந்து வரும் விலைவாசி, தொழிலாளர்களின் நியாயத்தை கருத்தில் கொண்டு ரூ. 3,000 இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.அரசின் அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கி வரும் சூழலில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மட்டும் கடந்த 13 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்தும்,அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் போக்குவரத்துத் கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியூ தலைவர் எம். ராஜாங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் பொதுச்செயலர் எஸ். பெருமாள், துணைப் பொதுச்செயலர்கள் சி. மணி, டி. காமராஜ்,போக்குவரத்துக் கழக சம்மேளன குழு உறுப்பினர்கள் டி. ஹரிகுமார், கே. ஜோதி, துணைத் தலைவர்கள் எம். மரியஜான், எஸ். சிவதாணுதாஸ் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சம்மேளன மாநில துணைப் பொதுச்செயலர் பி. காளிப்பன் போராட்டத்தை முடித்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...