குழந்தைகளுடன் பெண் கடத்தல்
பழனி கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பல்கிஷ்பேகம். இவரது மகள் மெர்சினாபேகம்(35). இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் காரைக்குடியில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். கணவர்


பழனியில் குழந்தைகளுடன் பெண் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பழனி கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பல்கிஷ்பேகம். இவரது மகள் மெர்சினாபேகம்(35). இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் காரைக்குடியில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மெர்சினாபேகத்திற்கும், அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல்கிஷ்பேகம், மெர்சினாபேகம் மற்றும் அவரது குழந்தைகளை பழனிக்கு அழைத்து வந்து வைத்துள்ளார். இந்நிலையில் மெர்சினா பேகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பழனி வந்த லட்சுமணன், மெர்சினாபேகத்திடம் ஆசை வார்த்தை கூறி அவரையும், அவரது குழந்தைகளுடன் கடத்திச் சென்று விட்டதாக பல்கிஷ்பேகம் பழநி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...