நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி மலைக்கோயிலில் மூன்றாம் எண் வின்ச்க்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்பில் புதிய வடக்கயிறு

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு படிவழி இருந்த காலத்தில் வயதான மற்றும் குழந்தைகளுடன் வருவோர் நலனுக்காக வின்ச் துவக்கப்பட்டது.  இதற்கு

News image
Updated On :25 ஜூன் 2014, 1:48 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயில் மூன்றாம் எண் வின்ச்சின் வடக்கயிறு மாற்றும் பணி புதன்கிழமை துவங்கியது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு படிவழி இருந்த காலத்தில் வயதான மற்றும் குழந்தைகளுடன் வருவோர் நலனுக்காக வின்ச் துவக்கப்பட்டது.  இதற்கு பக்தர்களிடம் ஏற்பட்ட ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்று வழிகளில் வின்ச் இயக்கப்பட்டு வருகிறது.  வின்ச் மூலம் ஒரே சமயத்தில் 32 பக்தர்கள் மலைக்கோயிலுக்கு 7 நிமிடத்தில் செல்ல முடிகிறது. வின்ச்களை இயக்குவதற்கான இயந்திரங்கள் மலைக்கோயில் மேல்தளத்தில் உள்ளன. பெரிய மோட்டார்கள் மூலம் டிரம்கள் சுழலுமாறு செய்யப்பட்டு வடக்கயிறு சுற்றும்போது வின்ச் மேலே வருமாறு இது நிறுவப்பட்டுள்ளது. 

வின்ச்சை மேலே இழுக்க பயன்படுத்தப்படும் வடக்கயிறானது பக்தர்கள் பாதுகாப்புக்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம்.  இதன்படி முதல் வின்ச்சுக்கான வடக்கயிறை கடந்த சிலமாதங்களுக்கு முன் மாற்றப்பட்ட நிலையில் மூன்றாம் எண் வின்ச்சுக்கான வடக்கயிறு மாற்றும்பணி புதன்கிழமை துவங்கியது.  பழனிக்கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் உத்திரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து, உதவி பொறியாளர் குமார், போர்மேன் ராஜா ஆகியோரின் கண்காணிப்பில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். 

இதற்காக கல்கத்தாவில் உள்ள ராஞ்சியில் இருந்து சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள 36 மி.மீ சுற்றளவுள்ள 450 மீட்டர் நீளமுள்ள வடக்கயிறு வாங்கப்பட்டுள்ளது.  வின்ச் பாதையின் நீளம் சுமார் 250 மீட்டர் மட்டுமே உள்ள நிலையில் மீதி வடக்கயிறு டிரம்மில் சுற்றி வைக்கப்படும்.  தற்போது வின்ச் மலைக்கோயில் மேலே ஸ்டாப்பர் மூலம் நிறுத்தப்பட்டு, பழைய வடக்கயிறு கழற்றுதல்,  புதிய வடக்கயிறை மேலே கொண்டு செல்லுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் வரும் சனிக்கிழமை வரை வின்ச் இயக்கப்படமாட்டாது. மற்ற இரண்டு வின்ச்சுகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.  மூன்றாம் எண் வின்ச் வரும் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.