மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை மாநகராட்சி ஆணையர் அறையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக

News image
Updated On :26 ஜூன் 2014, 12:16 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக தப்பின.

திருநெல்வேலி நகரத்தில் சுமாமி நெல்லையப்பர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் தரைத்தளத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர், செயற்பொறியாளர், சிறுகூட்ட அரங்குகள் உள்ளன. மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி, வியாழக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை அறையில் இருந்துள்ளார். அதன்பின்பு உணவு இடைவேளைக்காக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதாம். இதையடுத்து அறை முழுவதும் பரவிய தீயை மாநகராட்சி பணியாளர்களும் பொதுமக்களும் அணைக்க முயன்றனர். மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன்நாயர், உதவி ஆணையர் கருப்பசாமி உள்ளிட்டோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கோப்புகளையும், பொருள்களையும் அப்புறப்படுத்தினர். தகவலறிந்ததும் பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மாநகராட்சி ஆணையர் அறையில் இருந்த கணினி, பிரிண்டர், நாற்காலிகள், மேஜை உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமானதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.