சிதம்பரம் நகரில் விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை கோரி கணவரை இழந்த ஆதரவற்ற 65 வயது மூதாட்டி கடந்த 15 ஆண்டுகளாக மனு அளித்து போராடி வருகிறார்.
சிதம்பரம் நகரம் 1வது வார்டில் வசித்து வந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தவுடன் என்பவரது மனைவி அம்புஜம் (65). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. கணவரை இழந்த அம்புஜத்திற்கு குடியிருக்க வீடும் கிடையாது. இவர் காரைக்காட்டு வெள்ளாழத்தெருவில் ஒருவர் வீட்டு திண்ணையில் தங்கி வீட்டு வேலை செய்து உயிர் வாழ்ந்து வருகிறார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை கோரி ஒவ்வொரு ஜமாபந்தியிலும் மனு அளித்து போராடி வருகிறார். ஆனால் இன்று வரை அவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் உதவிஆட்சியர் எம்.அரவிந்திடம், முன்னாள் திமுக நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் உதவியுடன் சென்று மூதாட்டி அம்புஜம் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனு அளித்து விட்டு உதவிஆட்சியரிடம் மூதாட்டி அம்புஜம் தெரிவித்தது: உயிர்போகும் நிலையில் உள்ள எனக்கு வாழும் சிலகாலம் வரையாவது உதவித்தொகை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என கூறியது அனைவரையும் வேதனையுறச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


