தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நத்தம்காலனியில் மேலும் ஒருவர் கைது: போலீஸ் நடவடிக்கையை கைவிடக் கோரி பொதுமக்கள் முறையீடு

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியில் திங்கள்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் போலீஸார் மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிடக்கோரி

News image
Updated On :30 ஜூன் 2014, 12:13 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியில் திங்கள்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் போலீஸார் மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை அப்பகுதியினர் திரண்டு முறையிட்டனர்.

நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தின் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள ரயில் பாதையில் இளவரசன் சடலமாகக் கிடந்தார்.

இந்த நிலையில், வருகிற ஜூலை 4-ஆம் தேதி இளவரசனின் நினைவு தினத்தைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்க ஒரு சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரின.இதனால், தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தருமபுரி வருவாய் வட்டத்தில் இருவார காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சனிக்கிழமை நத்தம்காலனியில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வன்முறையை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் ஆகிவற்றை பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை நத்தம்காலனிக்கு சுமார் 10-க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நுழைந்தனர். இதில் அதேபகுதியைச் சேர்ந்த குப்புராஜ் என்பவரின் மகன் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் திருப்பதி(26) என்பவரை கைது செய்தனர்.காவல்துறை நடவடிக்கை கைவிடக் கோரி முறையீடு: நத்தம்காலனியில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், போலீஸார் நடவடிக்கையை கைவிட வேண்டும் என நத்தம்காலனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

இவர்களிடம், ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில், தேடுதல் வேட்டை என்ற பெயரில் தங்களது பகுதிக்கு ஏராளமான போலீஸôர் வந்து அப்பாவிகளை கைது செய்கின்றனர். இந்த நடவடிக்கை உடனியாக கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதற்கு குற்றச் செயல்களில் தொடர்பில்லாவதர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார். இதையடுத்து, இதே கோரிக்கையை காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்கிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் கூறியது: நத்தம்காலனியில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படிப்பையில் ஆயுதங்கள் வைத்திருந்து 7 பேரை இது வரை கைது செய்துள்ளோம். இவர்களிடமிருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சிலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாவர். குற்றச் செயல்களில் தொடர்பில்லாத யார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.