வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விலையில்லா பொருட்கள் வழங்கக் கோரி திடீர் மறியல்

திருநெல்வேலியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பெற டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பொறியியல் கல்லூரி

News image
Updated On :1 மார்ச் 2014, 1:47 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பெற டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பொறியியல் கல்லூரி பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

மாநகராட்சி 30 ஆவது வார்டுக்குட்பட்ட குறிச்சி, வசந்தாரபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள்

வழங்க குடும்ப அட்டையில் வருவாய்துறை அதிகாரிகள் முத்திரையிட்ட நிலையில் டோக்கன் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இதனிடையே சனிக்கிழமை டோக்கன் பெறுவதற்காக பலமணி நேரம் காத்திருந்தும் டோக்கன் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் வடக்கு புறவழிச்சாலையில் குறிச்சியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

தகவலறிந்த திருநெல்வேலி கோட்டாட்சியர் க. சீனிவாசன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் க. ஜெயமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 30 ஆவது வார்டு பகுதி பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வரப்பெற்றதும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.