வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாபநாசம் அணை நீர்மட்டம் 50.15 அடியாக குறைந்தது: பாசனத் திற்கு தண்ணீர் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பிசான சாகுபடி அறுவடை நடைபெற்று வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீ்ர் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 50.15 அடியாக இருந்தது.

News image
Updated On :2 மார்ச் 2014, 7:37 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பிசான சாகுபடி அறுவடை நடைபெற்று வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீ்ர் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 50.15 அடியாக இருந்தது.

தாமிரவருணி பாசனத்தில் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கார் சாகுபடிக்கு ஜூன் மாதமும், பிசான பருவ சாகுபடிக்கு நவம்பர் மாதமும் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டினால் மட்டுமே 80 அடி பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெற்று வரும் முதல், 2, 3 மற்றும் 4 ஆவது ரீச் குளங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டாத காரணத்தால் பிரதான கால்வாய் பாசனத்தில் தண்ணீர் திறக்கவில்லை.
2013 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவத்தில் மழை குறைவாக பெய்ததால் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்தவாறு உயரவில்லை. 143 அடி கொள்ளளவு பாபநாசம் அணை, 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டவில்லை.
எனினும் அணைகளின் உள்ள நீர் இருப்பை வைத்து நிகழ் பிசான பருவத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 86,107 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையில் இருந்தும், பெருங்கால் மதகு பாசனத்தில் 2586 ஏக்கர் நிலங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது பிசான பருவ அறுவடை நடைபெற்று வருவதால் அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

குடிநீர் தேவைக்கு மட்டும்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து 503.50 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. பெருங்கால் பாசனத்திற்கு மட்டும் அணையில் இருந்து 30 கனஅடி திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் ஒரு சில தினங்களில் மணிமுத்தாறு அணை மூடப்படும் என தெரிகிறது.
அணைகளின் நீர் இருப்பு: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2 ம் தேதி) பாபநாசம் அணை நீர்மட்டம் 50.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 106.74 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.63 அடியாக இருந்தது. மணிமுத்தாறு
அணைக்கு விநாடிக்கு 37 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 71.90 அடியாக இருந்தது.
ராமநதி அணை மூடல்: 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த 10 கனஅடி மட்டும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. அதிகளவில் அணையில் சகதி இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத நிலையில் அணை மூடப்பட்டது. கடனாநதி
அணையின் நீர்மட்டம் 39.90 அடியாக உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருந்த 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்து இல்லை: கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.75 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.76 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 39.50 அடியாகவும் இருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் அணைகள் வறண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.