சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-ம் நாள் நாட்டியாஞ்சலியில் சிதம்பரம், சென்னை, அரியலூர், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த நாட்டியப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
4-ம் நாட்டியாஞ்சலி விழா செ.க.க.சேது தீட்சிதர் தலைமையில் நடைபெற்றது. நாட்டியாஞ்சலியில் சிதம்பரம் நகரில் உள்ள தில்லை ஸ்ரீசிவகாமி நாட்டியாலயா, சிவசக்தி இசை நடனப்பள்ளி, கலைவாணி நாத நாட்டியாலயா, திட்டக்குடி ஸ்ரீசிவதுர்கா நாட்டியப்பள்ளி, சென்னை நிவேதனம் நாட்டியப்பள்ளி, சென்னை ஸ்ரீநூபுராலயா நாட்டியப்பள்ளி, அரியலூர் தகதிமிதா நாட்டியப்பள்ளி, பெங்களூர் பிராரோஹா கலை மையம், சென்னை நிருத்ய பரதாஞ்சலி, சென்னை நிருத்ய ஷேத்ரா ஆகிய நாட்டியப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம், கதக் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாட்டியப்பள்ளியில் பயின்ற சின்னஞ் சிறு கலைஞர்களின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நாட்டியப்பள்ளி மாணவியர்களின் நாட்டியத்தைக் காண திரளான மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்சடயா அருண்குமார், சென்னை ஜே.சூரியநாராயணமூர்த்தி மற்றும் அவரது மாணவியர்கள், சென்னை ஷ்ருத்தா ஆகியோரின் பரதமும், ஆஸ்ரேலியா ரேவதி இளங்கோவின் மோகினி ஆட்டமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


