தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Updated On :5 மார்ச் 2014, 1:08 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பிப்.5-ல் ஆர்ப்பாட்டம் நடத்த கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வே.ராஜரத்தினம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் எஸ்பி, சிதம்பரம் டிஎஸ்பி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது ரிட் மனு தாக்கல் செய்தார்.
ரிட் மனு (WP No.4846/ 2014) நீதிபதி பி.ராஜாராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.