மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வத்திராயிருப்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News image
Updated On :5 மார்ச் 2014, 12:14 pm

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளான தரமான கல்வி, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள், யோகா, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் பள்ளியில் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் உணர்த்தப்பட்டது.

பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பரமேஸ்வரி பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.