பணம் மோசடி வழக்கில் நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவின் பேரில் கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளர் சபா.சசிக்குமாரை, அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டம் சூசைபுரத்தைச் சேர்ந்த கொச்சப்பநாடார் மகன் செல்லதுரை என்பவரிடம், சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சபா.சசிக்குமார் 2012-ம் ஆண்டு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. சீட்டும் வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தை திருப்பித்தரவும் இல்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து செல்லதுரை நாகர்கோயில் விரைவு நீதிமன்றத்தில் பணம் மோசடி வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கில் ஆஜராகாமல் இருந்த சபா.சசிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நாகர்கோயில் விரைவு நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா மற்றும் போலீஸார், சபா.சசிக்குமாரை வியாழக்கிழமை கைது செய்து நாகர்கோயில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


