திருப்பாற்கடல் ஆக்கிரமிப்பு அகற்றம்: தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உதவிஆட்சியர் நோட்டீஸ்
திருப்பாற்கடல் தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து மீண்டும் தொல்லை செய்ய வேண்டாம் என தனியார் பள்ளி தாளாளருக்கு, சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த்


திருப்பாற்கடல் தீர்த்தகுளம் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து மீண்டும் தொல்லை செய்ய வேண்டாம் என தனியார் பள்ளி தாளாளருக்கு, சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸ் விபரம்: சிதம்பரம் வேங்கான்தெருவில் 6641 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள பொதுமக்கள் உபயோகமாக பயன்படுத்தி வந்த திருப்பாற்கடல் குளம் என்ற பொது இடத்தை காமராஜ் மேல்நிலைப்பள்ளி தாளாராகிய, தாங்கள் குளத்தை மண்கொட்டி தூர்த்து மேடாக்கியும், சிமெண்ட் ஷீட் கொட்டகை போட்டும், குளத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளது போன்ற ஆக்கிரமிப்புகளை உருவாக்கி, பொதுமக்கள் உபயோகத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தியதாலும், நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்பால் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் ஆகியவை சீர்கெடும் என்பதாலும், நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளதாலும், தாங்களால் உருவாக்கப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133 (1)-ன் கீழ் கடந்த மார்ச் 1-ம் தேதி இறுதி ஆணை உறுதி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆதலால் மேற்சொன்ன தொல்லையை திரும்பவம் செய்ய வேண்டாம் அல்லது தொடர வேண்டாம் என்றும், அவ்வாறு தாங்கள் செய்யும் பட்சத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு 1860 (45 of 1869)- ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உத்தரவில் தெரிவித்துள்ளார்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...