ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியில் இருந்த தலைமைக் காவலரைத் தாக்கி கீழே தள்ளி காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம், மல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ரகுபதி கண்ணன். இவரும் கிரேடு 1 காவலர் செந்தில்குமார் என்பவரும் மல்லி பஜாரில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருவுத்தேவர் மகன் முத்துக்குமார் (32) என்பவர் குடி போதையில், அவ்வழியே போவோர் வருவோரை ஆபாசமாகப் பேசி தகாறு செய்து கொண்டிருந்தார். தலைமைக் காவலர் ரகுபதி கண்ணன், முத்துக்குமாரை அங்கிருந்து போகும்படி பல முறை எச்சரித்தும் கேளாமல், அவரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியுள்ளார்.
மேலும் ரகுபதி கண்ணனை கீழே தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் தலைமைக் காவலர் ரகுபதி கண்ணனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ரகுபதி கண்ணன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


