எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் தேர்தல் துறை பணிகள் மந்தம் - இந்திய. தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

காரைக்கால் தேர்தல் துறை பணிகள் மந்தமாக இருப்பதாகவும், தேர்தல் துறையின் பறக்கும் படையினர் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடவில்லையெனவும், ஒட்டுமொத்தமாக தேர்தல் பணி அனுபவமில்லாத தலைமையால் இந்த நிலை என புதுவை பாஜக புகார் கூறியுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2014, 10:28 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் தேர்தல் துறை பணிகள் மந்தமாக இருப்பதாகவும், தேர்தல் துறையின் பறக்கும் படையினர் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடவில்லையெனவும், ஒட்டுமொத்தமாக தேர்தல் பணி அனுபவமில்லாத தலைமையால் இந்த நிலை என புதுவை பாஜக புகார் கூறியுள்ளது.

புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :   புதுவை ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடக்கவுள்ள தேர்தலையொட்டி தேர்தல் துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அண்டை மாநிலமான தமிழகத்தில் தேர்தல் துறையின் பணிகள் வெகுவாக பாராட்டும்படி உள்ளன. ஆனால் காரைக்காலில் தேர்தல் துறையின் பணி மந்தமான நிலையிலேயே உள்ளது.

குறிப்பாக காரைக்கால் நகரிலும், பிற பகுதியிலும் தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவை தேர்தல் துறையினரால் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் துறை பல்வேறு பறக்கும்படையினரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் கொண்ட பறக்கும்படை மாவட்ட ஆட்சிரகத்தை சுற்றிச் சுற்றி வருகின்றனரே தவிர, ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடவில்லை.

காரைக்கால் மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் தேர்தல் துறையினர் உரிய சோதனைப் பணியை மேற்கொள்ளவில்லை.

புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காரைக்கால் கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் கட்சி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இது தேர்தல் விதிக்கு முரணானது என தெரிந்தும் தேர்தல் துறை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

தமிழகத்தில் வாகன சோதனை செய்யப்படும்போது பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால் காரைக்காலில் கடந்த கால  தேர்தலின்போது, பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. இப்போதும் அப்படி இருக்க வாய்ப்புள்ள நிலையில், தேர்தல் துறையோ, காவல்துறையோ உரிய சோதனைகளை மேற்கொள்ள முன்வரவே இல்லை.

தினமும் தேர்தல் துறையால் ஒவ்வொரு எச்சரிக்கை தகவல் பத்திரிகைகளில் வருகின்றனவே தவிர, அதற்கான நடவடிக்கை என்பது முற்றிலும் இல்லை.

தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகளில் ஆர்வமாக செயல்படவில்லை. வேட்பாளர்களுக்கு சாதகமான போக்கையே தேர்தல் துறையினர் கையாண்டு வருகின்றனர். காரைக்காலை சேர்ந்த 2 பேர் அதிமுக, திமுக வேட்பாளராகவுள்ளனர். காங்கிரஸில் மத்திய இணை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள் சாதகமான நிலை எடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில், தேர்தல் பணி அனுபவமில்லாத அதிகாரிகள் நியமனத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடக்கவுளளது. தேர்தலுக்கு கால அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் முன் அனுபவமுள்ளவர்களை தேர்தல் துறை அதிகாரிகளாக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அருள்முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.