நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாதுகாப்பு கேட்டு தலித் மாணவர்கள் சிதம்பரம் உதவிஆட்சிரிடம் மனு!

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சில தினங்கள் முன்பு காடுவெட்டி குரு படம் போடப்பட்ட வன்னியர் சங்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இதுகுறித்து சில தலித்

News image
Updated On :12 மார்ச் 2014, 12:41 pm

ஜி.சுந்தரராஜன்

பாதுகாப்பு அளிக்க கோரி சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் தலித் மாணவர்கள், சிதம்பரம் உதவிஆட்சியரை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சில தினங்கள் முன்பு காடுவெட்டி குரு படம் போடப்பட்ட வன்னியர் சங்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இதுகுறித்து சில தலித் மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புகார் அளித்தை தெரிந்த சில மாணவர்கள், ஏன் புகார் செய்தீர்கள் எனக்கூறி தலித் மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் கிள்ளை போலீஸார் சென்று இரு தரப்பு மாணவர்களையும் சமரசம் செய்து, இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்திடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு தலைமையில் கல்லூரியில் பயிலும் தலித் மாணவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். மனு விபரம்: கல்லூரியில் பயிலும் தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதகு வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரியை நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல் தாழ்த்தப்பட்ட தலித் மாணவ, மாணவியர்களுக்கு தனியாக சிதம்பரம் பகுதியில் கல்லூரி அமைத்திட வேண்டும். இல்லையெனில் அரசு ஏற்றும் நடத்தும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைக்கல்லூரி தொடங்கி, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பான நிலையை அளித்திட வேண்டும். ஜாதி ரீதியாக பணியாற்றும் பேராசிரியர்களையும் இடமாற்றம் செய்திட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.