விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு: 4 பேருக்கும் தூக்கு உறுதி

தில்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பலத்த காயமுற்ற அந்த மாணவி சிங்கப்பூர்

News image
Updated On :13 மார்ச் 2014, 10:00 am

வேல்முருகன்

தில்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பலத்த காயமுற்ற அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தில்லியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விரைந்துத செயல்பட்ட போலீஸார் குற்றாவாளிகள் 6 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு நபர் 18 வயதுக்கு குறைவான நபர்  என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் மீதம் உள்ள 4 குற்றவாளிகள் மீது  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேருக்கு  தூக்கு தண்டனை விதித்து தில்லி  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் மாணவியை பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குதண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.