வீணாகும் வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி செய்ய இயலும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜெப்ரி பெர்கஸ் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சியாளர்களுக்கான கருத்தரங்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.
ஆட்டோமொபைல் துறைத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். அமெரிக்கா நாட்டில் உள்ள அபர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெப்ரி பெர்கஸ் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வீணாகும் வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி அபர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆலைகளில் வீணாகும் வெப்பம், பெரிய மலைகளில் எரிமலை ஏற்படும் உண்டாகும் வெப்பம் முதலிய வீணாகும் வெப்பத்தை முதலில் பல அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ள மெட்டீரியல்கள் வழியாக செலுத்த வேண்டும்.
இந்த மெட்டீரியல்கள் வெப்பத்தை எடுத்து மின்சாரமாக மாற்றுகின்றன. இதற்காக பிரத்யேக குரோமியம், நிக்கல், கோபால்ட் கலந்த மெட்டீரியல்ஸை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் செல்லும் வெப்பம் 1000 செல்சியல் வரை இருக்க வேண்டும்.
இதன் மூலம் தற்போது கிடைக்கும் மின்சாரம் ஏறி இறங்கி கிடைக்கிறது. இது ஒரே சீராக கிடைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.இதுவரை காற்று, நீர், சூரிய ஒளி உள்ளிட்ட முறைகளில் மின்சார உற்பத்தி நடைபெற்று வந்தாலும், வீணாகும் வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று துணை வேந்தர் டாக்டர் சரவண சங்கர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


