ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்

தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு

News image
Updated On :24 மார்ச் 2014, 8:53 am

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது. இதற்கான கொள்கைகள், சட்டத்திட்டங்கள், வரையரைகள், விதிமுறைகள் ஆகியவைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற ஏப்.20-ம் தேதி சென்னையில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து மாநில அளவில் கூட்டத்தை கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளனர் என அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.