மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்: நாஞ்சில் சம்பத்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் மாற்றுக் கட்சி வேட்பாளரான, திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். சிதம்பரம் தொகுதியின் நிழலும், நிம்மதியும்
மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்: நாஞ்சில் சம்பத்
Updated on
2 min read

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் மாற்றுக் கட்சி வேட்பாளரான, திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். சிதம்பரம் தொகுதியின் நிழலும், நிம்மதியும் சூறையாடப்பட்டு விடும் என அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்,

சிதம்பரம் மேலரதவீதியில் திங்கள்கிழமை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். அவர் பேசியதாவது:

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் 16-வது குருஷேத்திர யுத்தம் இது. ஆயுதத்தை கீழே போடாத அர்ச்சுனனாக சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி நிற்கிறார். அவருக்கு அளிக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதற்கு சமம். திமுக தலைவர் கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின் இங்கு பேசியுள்ளார். எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என கருணாநிதி குட்டியை ஏவி விட்டுள்ளார். ஏழே, ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த சிதம்பரம் தொகுதியில் நீங்கள் கரையேற முடியாது. இத்தொகுதியில் போட்டியி்டும் மாற்றுக்கட்சி வேட்பாளரான உங்களுக்கு வாக்களித்தால் சிதம்பரம் தொகுதியின் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதையும். சிதம்பரம் தொகுதியின் நிழலும், நிம்மதியும் சூறையாடப்பட்டுவிடும் என்பதையும் பொதுமக்கள் இன்றைக்கு உணராமல் இல்லை.

ஆனால் ஸ்டாலின் இந்தியாவிற்காக நடைபெறும் இந்த தேர்தலை, தமிழ்நாட்டிற்காக நடைபெறுகின்ற தேர்தல் என கருதிக்கொண்டு அவர் பேசிக்கொண்டு செல்கிறார். இது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கிற தேர்தல். ஜெயலலிதா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைக்கும் நேரமும் அல்ல. அதற்குரிய களமும் இல்லை. நாளைக்கு நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? திமுகவின் பங்களிப்பு என்ன? இந்திய அரசியலில் உங்கள் பங்களிப்பு என்ன? என்பதை சொல்ல முடியுமா? நான் கேட்கிறேன்.

எங்கள் பங்களிப்பு என்னவென்று சொல்கிறேன். ஜெயலலிதாவையும், அதிமுகவையும் நிராகரித்துவிட்டு இந்திய அரசியலில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அதிமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் புதைகுழியில் உள்ளது. இந்தியாவில் ரூபாய் பதிப்பு சரிந்து, நிதிநிலை சரிந்து உலக நாடுகளில் இந்தியான நாணயத்தின் மீது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு பல்வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இந்தியா மீட்டெடுக்க வல்லமை உள்ள தலைமை தேவை.

ஒருநாள் இந்தியாவின் பிரதமர் பதவி காமராஜருக்கு வந்தது. அதனை இந்திராவிற்கு தந்தார். ஜி.கே.மூப்பனாருக்கு தேடி வந்தது. அதற்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியாவின் பிரதமர் மகுடம் ஜெயலலிதாவை தற்போது தேடி வருகிறது. இப்படி ஒரு வல்லமை உள்ள தலைமைக்காக இந்தியா தவம் இருக்கிறது. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தை தொடங்கிய போது அகில இந்திய அண்ணா திமுக என பெயர் சூட்டினார். என்றைக்காவது ஒருநாள் இந்த இயக்கம் இந்தியாவை ஆளும் இடத்திற்கு வரும் என நம்பி அந்த பெயரை வைத்துள்ளார். அந்த நம்பிக்கைக்கான நேரம் வந்துள்ளது என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

பிரசாரத்தின் போது நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com