ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரத்தில் நடைபெறவிருந்த விஜயகாந்த் பிரசாரம் திடீர் ரத்து!

சிதம்பரம் மேலரதவீதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை 3

News image
Updated On :25 மார்ச் 2014, 8:56 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3  மணிக்கு நடைபெற இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் மேலரதவீதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுவதாக  அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பிரசாரக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என ஒரு தரப்பினரும், புதுச்சேரியில்  பாமக,  என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.